மகாராணியின் மறைவிற்கு கனேடியர்கள் எவ்வாறு இரங்கல் வெளியிட முடியும்?
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு கனேடியர்கள் எவ்வாறு இரங்கல் வெளியிட முடியும் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் மகாராணிக்கு இரங்கல் வெளியிடுவதற்காக விசேட அதிகாரபூர்வ இரங்கல் புத்தகமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இந்த இரங்கல் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மகாராணியின் மறைவிற்கு இரங்கல் வெளியிடவும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த இணைய தளத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
500 சொற்களுக்குள் இரங்கல் செய்தியை பதிவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், மாகாணம் ஆகிய விபரங்களை உள்ளடக்கி இந்த இரங்கல் புத்தகத்தில் தங்களது இரங்கலை வெளியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பொருத்தமற்ற செய்திகளை இதில் பதிவிட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.
இணைய வழியில் போன்றே நாட்டின் முக்கிய அரசாங்க நிறுவனங்களில் இரங்கல் புத்தகங்கள் வைக்கப்படும் எனவும் அதில் மக்கள் நேரடியாகவும் தங்களது இரங்கல்களை வெளியிட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் ஆளுனர் நாயகம் மேரி சிமோனும் இந்த இரங்கல் புத்தகத்தில் தனது இரங்கல் பதிவினை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.