இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி படுகொலை
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் (ஐ.டி.எப்.) லெபனானின் பெகா பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி காசிம் கோரப் கொல்லப்பட்டு உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
ஹிஸ்புல்லா தளபதி காசிம் கோரப் உயிரிழப்பை, ஐ.டி.எப். இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் உறுதி செய்து உள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது.
20 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், காசா பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.
அதோடு காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளி இஸ்ரெலிடம் போரை நிறுத்துமாறு வலியுறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.