ஒன்றாரியோவில் இடம்பெற்ற கோர விபத்து 3 பேர் பரிதாப மரணம்
ஒன்றாரியோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்டாரியோ நெடுஞ்சாலை 11ல், இந்த இரு வாகன விபத்து, ஒபசாடிக்கா பகுதியில், சுமார் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு டிராக்டர்-டிரெய்லர் லாரி மற்றும் ஒரு பிக்கப் லாரி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிக்கப் லாரியில் நான்கு பேர் பயணித்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை ஓட்டிய 41 வயது நபர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதே வாகனத்தில் பயணித்த 41 வயது ஒருவர், 15 வயது சிறுவன், 12 வயது சிறுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
டிராக்டர்-டிரெய்லர் வாகனத்தின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.