அமெரிக்காவில் இந்து கோவிலுக்குள் புகுந்து உண்டிலை திருடிய மர்மநபர்கள்!
அமெரிக்காவில் இந்து கோவிலுக்குள் மர்மநபர்கள் சிலர் புகுந்து உண்டியலை திருடி கொண்டு செல்வது கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
கலிபோர்னியா மாகாணம் சேக்ரமென்டோ நகரில் விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. அதிகாலையில் 2 மணியளவில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி திடீரென ஒலிக்க தொடங்கின.
இது குறித்த எச்சரிக்கை கோவில் நிர்வாகிகளின் செல்போன்களுக்கு வந்தது. இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டது.
முறைப்பாட்டின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றனர். அங்கு கோவிலில் இருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவை சோதித்தபோது மர்மநபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.
இது தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் திருடர்களை தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக பொலிஸார் இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.