அமெரிக்க தேசிய கீதத்துக்கு எதிர்ப்பை வெளியிட்ட கனடியர்கள்
அமெரிக்காவின் தேசிய கீதத்திற்கு கூக்குரல் எழுப்பி எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற ஐஸ் ஹொக்கி போட்டி ஒன்றின் போது இவ்வாறு அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கனடிய ரசிகர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒட்டாவா செனட்டர்ஸ் ஹொக்கி அணியின் ஆதரவாளர்கள் இவ்வாறு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். கனடிய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஹாக்கி போட்டியில் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கனடிய அணியின் ரசிகர்கள் கூக்குரல் எழுப்பி அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க தேசிய கீதத்தை எதிர்த்து கூக்குரல் எழுப்பும் காட்சிகள் சமூக ஊடகம் வாயிலாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.