அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு டாக் போர்ட் எதிர்ப்பு
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரியானது நியாயமற்ற நீதி அற்ற சட்டவிரோதமான செயல் என போர்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
கனடாவுடன் அமெரிக்கா ஏற்ப்படுத்திக் கொண்ட வர்த்தக இணக்க பாடுகளை மீறி உள்ளதாகவும் இது ஏமாற்றம் அளிக்கும் வகையிலானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா அமெரிக்காவின் மிக நெருங்கிய நாடு எனவும் நெருங்கிய வர்த்தக பங்குதாரர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரிவிதிப்பு தீர்மானம் கனடாவை போன்றே அமெரிக்க பிரஜைகளையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கனடிய மக்களின் மீண்டெழும் தைரியத்தை குறைத்து மதிப்பீடு செய்துள்ளதாக டாக் போர்ட் தெரிவித்துள்ளார்.