கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு ...
கனடாவில் வீட்டு சந்தை 2026 ஆம் ஆண்டில் மீண்டும் எழுச்சி பெறும் என ரியல் எஸ்டேட் நிறுவனமான றோயல் லீபேஜ் Royal LePage எதிர்பார்க்கிறது.
2025 ஆம் ஆண்டின் பொருளாதார மற்றும் அரசியல் அசாதாரண நிலைக்கு பின், வீடு வாங்குவோரின் நம்பிக்கை திரும்பத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இந்த ஆண்டில் கனடா வங்கி நான்கு முறை வட்டியை குறைத்து, கொள்முதல் வாய்ப்பை மேம்படுத்தியுள்ளது.

தற்போது வட்டி விகிதம் 2.25% ஆக இருப்பதால், மேலும் குறையும் என காத்திருப்பவர்கள் மீண்டும் சந்தையில் நுழைவார்கள் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வட்டி வீதத்திற்கான அச்சம் குறைந்ததால், வாங்குபவர்கள் மீண்டும் முன்பணிகள் செய்யத் தொடங்குவார்கள் என றோயல் லீபேஜ் நிறுவனத் தலைவர் பில் சோப்பர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் வர்த்தக கொள்கைகள் வீட்டுச் சந்தையில் கலக்கத்தை ஏற்படுத்தியதாக சோப்பர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக வீடு வாங்குவோரின் நம்பிக்கை கடுமையாக குறைந்தது என தெரிவித்துள்ளார்.