அடுத்த ஆண்டில் கனடாவில் வீடுகள் விலை சிறிதளவு குறையும்
எதிர்வரும் 2023ம் ஆண்டில் கனடாவில் வீடுகளின் விலைகள் சிறிதளவு குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Royal LePage என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக் காலாண்டுப் பகுதியில் கனடாவில் வீடுகளின் விலைகள் ஒரு வீதத்தினால் குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வருட ஆரம்பத்தில் விலை குறைந்து பின்னர் கூடி இறுதிக் காலாண்டு பகுதியில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டு சராசரியாக வீடு ஒன்றின் விலை 756171 டொலர்களாக காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி வீத அதிகரிப்பு மற்றும் வீட்டு நிரம்பலில் காணப்படும் நெருக்கடி நிலைமைகளினால் கொள்வனவு இயலுமை குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் வான்கூவாரில் வீடுகளின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வீடு கொள்வனவு செய்யக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படும் பகுதியாக ரெஜினா குறிப்பிடப்பட்டுள்ளது.