கனடாவில் பண வீக்கம் குறித்து கரிசனை கொண்ட பணியாளர்கள்
கனடாவில் பண வீக்கம் மற்றும் தொழில் அழுத்தம் காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
பணவீக்கம் தங்களது வியாபாரத்தை மோசமாக பாதிக்கின்றது என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குஸ் ரீட் மற்றும் ஒன்றோரியா பென்ஷன் பிளான் ஆசிய அமைப்புகள் இந்த கருத்துக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
பணவீக்கத்தை போன்று பணியாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் அழுத்தங்களும் பெரும் கரிசனைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு பணவீக்கம் தொடர்பிலும் பணி அழுத்தம் தொடர்பிலும் பணியாளர்கள் கூடுதலான கவலையை வெளியிட்டுள்ளனர்.
90 வீதமான கனடிய நிறுவனங்கள் உற்பத்தி இயலளவு சார் அழுத்தங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.