கனடாவின் இந்த நகரில் நீா் பயன்பாட்டை வரையறுக்குமாறு அறிவுறுத்தல்
கல்கரி நகரில் ஒரு முக்கிய நீர் குழாயில் பழுது பார்கும் பணிகள் துவங்குவதையொட்டி, நகரவாசிகள் தங்கள் நீர் பயன்பாட்டை குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பராமரிப்பு பணிகள் பியர்ஸ்பேவ் என்ற நகரின் முக்கிய குடிநீர் குழாயின் பல பாதிக்கப்பட்ட பகுதிகளை பழுதுபார்க்கும் நோக்கில் நடைபெறுகிறது.
இந்த குழாயில் கல்கரியின் குடிநீர் சுமார் 60 சதவீதம் விநியோகம் செய்யப்படுகின்றது. இந்தப் பணிகள் நாலு வாரங்கள் நடைபெறும் என நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கல்கரி முழுவதும் குடிமக்களும் நிறுவனங்களும் நீரை மிதமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒற்றுமையாக பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு துளியும் முக்கியம் என கல்கரியின: மெயர் ஜெரோமி பார்க்ஸ் தெரிவித்துள்ளார்.