என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி? ; சீன - ரஷ்ய ஜனாதிபதிகள் பரிமாற்றிக்கொண்ட தகவல்
பீஜிங்கில் நடந்த இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், ஆயுளை நீடிப்பது குறித்து பேசிக்கொண்ட விடயங்கள் காணொளி வடிவில் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
''கடந்த காலத்தில், 70 வயதைத் தாண்டி ஒருவர் வாழ்வது அரிதாக இருந்தது. ஆனால் தற்போது 70 வயது இன்னும் இளமையாக இருக்கிறது என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளமையாக என்றென்றும் வாழ..
"உயிர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகளை மீண்டும் மீண்டும் இடமாற்றம் செய்யலாம், இதன் மூலம் மக்கள் இளமையாக என்றென்றும் வாழ முடியும்." என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த நூற்றாண்டின் கணிப்புகளின்படி, 150 ஆண்டுகள் வரை வாழ முடியும்."என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேலும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புட்டினும் ஷி ஜின்பிங்கும் முறையே 25 மற்றும் 13 ஆண்டுகள் தங்கள் நாடுகளை ஆட்சி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அவர்கள் இருவரும் இதுவரை தங்கள் பதவிகளை விட்டு விலகுவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.