தீடிரென வீட்டில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த பாரிய மலைப்பாம்பு! வைரல் வீடியோ
மலேசியாவில் உள்ள வீடொன்றின் கூரை வழியாக 80 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு விழுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மலேசியாவில் உள்ள காமுண்டிங்க் நகரில் வீடொன்றில் திடீரென கூரையை பிய்த்து கொண்டு 5 அடி நீளம் கொண்ட பெரிய மலைப்பாம்பு வீட்டில் இருந்த சோபா மீது விழுந்தது.
அப்போது வீட்டில் இருந்த உறுப்பினர்கள் சில நொடிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த மலைப்பாம்பு சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
Anggota Angkatan Pertahanan Awam Malaysia (APM) berjaya menangkap ular sawa bersaiz besar di atas siling rumah di Jalan Ayer Puteh Kampung Dew, Kamunting.
— Malaysia Tribune (@Msia_Tribune) November 25, 2024
Video - APM Taiping#malaysiatribune #ular pic.twitter.com/g3o4yMymIA
இது குறித்து தகவலறிந்தது வந்த சிவில் பாதுகாப்பு நிறுவனத்தினர் வீட்டு கூரையின் ஒரு பகுதியை இடித்து சோபாவில் கிடந்த பாம்பை மீட்டு வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர்.