கனடாவில் மனித எச்சங்கள் மீட்பு: சந்தேகத்தில் இருவர் கைது
கல்கரியின் ஸ்கைவியூ ரேஞ்ச் பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குப் பிறகு, ஸ்கைவியூ ரேஞ்ச் வீதியின் 200 ஆவது கட்டடப் பகுதியில் உள்ள வீடொன்றின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான அழைப்பைப் பெற்று பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது, மனித உடல் எச்சங்கள் இருப்பதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் லீ மற்றும் ஹெலன் லீ ஆகிய தம்பதியனர் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகிய இருவர் மீது ‘மனித உடலை அவமதித்தல்’ என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான உடற்கூறாய்வு பரிசோதனைகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகவும், அது நிறைவடைந்த பின்னரே உயிரிழந்தவரின் பெயர் மற்றும் அடையாளங்கள் வெளியிடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை அல்லது மரணம் குறித்து மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், 403-266-1234 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறும், அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) மூலம் ரகசியமாகத் தகவல்களை வழங்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.