கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்துவருவதாக வெளியாகியுள்ள தகவல்
கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்துவருவதாக கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனிதர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பாலியல் துஷ்பிரயோகம் அல்லது வேறு நோக்கங்களுக்காக ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ சட்டவிரோதமாக துஷ்பிரயோகம் செய்வதே ஆட்கடத்தல் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொண்டு அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் தப்புவது கடினமாகிவிடுகிறது.
இந்நிலையில், கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஒன்ராறியோவிலுள்ள Guelph மற்றும் Thunder Bay ஆகிய நகரங்களில்தான் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெறுகிறது என கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக Guelphஇலும், அதற்கு அடுத்தபடியாக ஹாலிஃபாக்ஸ் மற்றும் Thunder Bay ஆகிய நகரங்களில்தான் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெறுகிறதாம்.