பிரியாணி சுவையில்லை; யாழ் மனைவியிடம் விவாகரத்து கோரும் ஐரோப்பிய வாழ் கணவர்
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு விசித்திரமான விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது மனைவி சமைக்கும் பிரியாணி சுவையில்லாமல் இருப்பதால் டென்மார்க்கைச் சேர்ந்த 41 வயதான கணவன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
அடிக்கடி வாக்குவாதங்கள்
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மனைவி மீதே இவ்வாறு விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, மனைவி சமைக்கும் பிரியாணி சுவையாக இல்லாததால், கணவருக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு பிரியாணி மீது தனக்கு தனித்துவமான ஆர்வம் உள்ளதாகவும், சமாதானமான வாழ்க்கையை தான் விரும்புவதால் தேவையற்ற மோதல்களை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்ததாக டென்மார்க் கணவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முழுமையாக விசாரித்து சட்டப்பூர்வமான விவாகரத்தை வழங்குமாறு டென்மார்க் கணவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த விவாகரத்து வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்