அதிபர் புடின் முகத்தில் குத்த நான் தயார்; ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடி!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்(Vladimir Putin) முகத்தில் குத்த நான் தயாராக இருக்கிறேன் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்தும், அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது.
அத்துடன் ரஷ்ய படைகளை கைப்பற்றி வைத்து இருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல், போர் நடவடிக்கை உக்ரைன் கைவிடப் போவது இல்லை என்று அறிவித்தது.
இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இன்னும் பல மாதங்கள் தொடரும் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் LCI தொலைகாட்சிக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “ரஷ்ய ஜனாதிபதி புடினின்(Vladimir Putin) முகத்தில் நான் குத்த தயாராக இருக்கிறேன்” என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த முதல் வாய்ப்பு நாளையாக இருந்தாலும் கூட நான் தயாரகவே இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.