இந்த முறை குறி தப்பாது ...நான் கொல்லப்பட்டால் ஈரான் இருக்காது; டிரம்ப் கடும் எச்சரிக்கை!
நான் கொல்லப்பட்டால் ஈரான் இந்த உலகத்தில் இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பண வீக்கம் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
மேலும் பலருக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த ஈரான் நாட்டு மக்கள் அந்நாட்டுக்கு எதிராக கடந்த 20 நாட்களுக்கு மேல் போராடி வருகிறார்கள்.

இந்த முறை குறி தப்பாது’
போராட்டத்தை கலைப்பதற்காக ஈரான் அரசு பாதுகாப்பு படையை களமிறங்கியது. கண்ணீர் புகை குண்டு வீசுவது, துப்பாக்கினில் சுடுவது என ஒருகட்டத்தில் போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது.
இந்த கலவரத்தில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். ஒருபக்கம் ஈரான் நாட்டு அரசுக்கு எதிராகவும் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியிருக்கிறது.
ஈரான் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவ படையும் அனுப்பினார்.
இந்நிலையில் 2024ம் வருடம் நடத்தப்பட்ட தாக்குதலில் டிரம்பின் காது பகுதியில் துப்பாக்கி குண்டு உரசி சென்ற புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த ஈரான் அதிபர், ‘இந்த முறை குறி தப்பாது’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ‘நான் கொல்லப்பட்டால் இந்த உலகத்திலிருந்து ஈரான் துடைத்து எறியப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்