புடினின் பொறுப்பற்ற செயல்களால் ஐரோப்பியாவிற்கு பாதிப்பு;போரிஸ் ஜான்சன்
புடினின் பொறுப்பற்ற செயல்கள் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) கூறி உள்ளார்.
உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9-வது நாளாக இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல் துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளியேறி உள்ளனர்.
இதன்படி முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான தாய்மார்கள் போர் மண்டலத்திலிருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டி போலந்துக்குச் சென்று உள்ளனர்.
ரஷியாவின் உக்கிர தாக்குதலில் நகரம் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் நெருப்பு குழம்புகளும் புகையுமாக காணப்படுகிறது. முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் விழும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1.30 மணி நேரம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு உக்ரைன் மீதான தாக்குதலை குறைக்கப் போவதில்லை என புடின் பதில் அளித்ததாக அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. புடினின் பொறுப்பற்ற செயல்கள் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.
போரிஸ் ஜான்சன் (Boris Johnson )கூறும் போது ரஷிய அதிபர் புடினின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் இப்போது ஐரோப்பா முழுவதிலும் பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.