பிரான்ஸ் மக்களுக்கு ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸ் மக்கள் யாரும் குளிர்காலத்தை நினைத்து அச்சமடைய வேண்டாம் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron)நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“பிரான்ஸில் எங்கள் வழக்கமான மின்சார நுகர்வுகளை சுமார் 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளதுடன், நாங்கள் நிதானமான திட்டத்தை வைத்திருப்பால் குளிர்காலத்தில் மின்சார தடையின்றி செல்ல முடியும் என்பதனை நான் உறுதியளிக்கின்றேன்.
இந்த குளிர்காலத்தில் பிரான்ஸில் ஏற்படும் மின்வெட்டு அச்சுறுத்தல்கள் குறித்து அச்சமடைய வேண்டாம் என உறுதியளிக்க விரும்புகின்றேன்.
மின்சாரம் தீர்ந்தால் சில மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய ஒரு தீவிர நிகழ்வுக்கு தயாராகும் வேலை அரசாங்கத்தால் செய்யப்படுகிறது என்று அரச தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சூழ்நிலை சாத்தியமில்லை என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.