பிரான்ஸில் அடுத்தாண்டு முதல் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!
பிரான்ஸில் அடுத்த ஆண்டு முதல் எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதியன்று எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களின் விலை வரம்பு 2023ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் தற்போதைய நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு எரிவாயு மற்றும் மின்சார விலை உயர்வு 4 சதவீதத்தில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது 15 சதவீதமாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் எரிவாயு மூலம் சூடேற்றப்படும் வீடுகளுக்கான எரிசக்தி கட்டணங்கள் மாதத்திற்கு 25 யூரோவாக உயரும். விலை வரம்பு இல்லாவிட்டால், இந்த அதிகரிப்பு மாதத்திற்கு சுமார் 200 யூரோவாக இருக்கும்.
மின்சாரத்தால் சூடேற்றப்படும் வீடுகளுக்கு, மாதாந்திர கட்டணங்களுக்கான அதிகரிப்பு 180யூரோவில் இருந்து 20 யூரோ மேலதிகமாக அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
புதிய மாற்றம் அனைத்து வீடுகளுக்கும், சமூக வீடுகள் மற்றும் சிறு வணிகங்கள் உட்பட அனைத்து வகையான சொத்துக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள சுமார் 12 மில்லியன் ஏழ்மையான குடும்பங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதற்கமைய, வருமானம் குறைந்த 20 சதவீதமான மக்கள் 200 யூரோ பெறவுள்ள நிலையில் 20 சதவீதமானோர் 100 யூரோவை பெறுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த கொடுப்பனவிற்கான காசோலை ஒவ்வொரு குடும்பங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.