இத்தாலியில் பெண்ணை கொலை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
இத்தாலியில், பெண்ணை கொலை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம், அந்நாட்டு நாடாளுமன்றில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பிரத்யேக சட்டத்தை கொண்டு வர முடிவு செய்தது.

அதன்படி, பெண்ணை கொலை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்டது.
இதற்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்ததால், அச்சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த உலகளாவிய புள்ளி விபரங்கள் அச்சமூட்டும் வகையில் உள்ள நிலையில், தற்போது கொண்டு வரப்பட்ட சட்டம், இத்தாலியில் பெண்கள் பாதுகாப்பாக வாழ வழிவகை செய்யும் என, அந்நாட்டின் பெண் பிரதமரான ஜியார்ஜியா மெலோனி பெருமிதம் தெரிவித்தார்.