இந்தியாவை தடுப்பதற்காகவே வெளிப்படையாக குற்றம் சாட்டினோம்: கனடா பிரதமர்
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால், இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அப்படி வெளிப்படையாக குற்றம் சாட்ட என்ன காரணம் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் அவர்.
Reuters
கனேடியர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக நம்பத்தகுந்த எங்களிடம் உள்ளன என்பதை வெளிப்படையாக கூறுவதன் மூலம், இந்தியா இனிமேலும் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவே, அதை சத்தமாக, வெளிப்படையாக கூறினோம் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.
இனிமேல் அப்படிஎதுவும் செய்யக்கூடாது என்ற பயம் இந்தியாவுக்கு ஏற்படவேண்டும் என்ற காரணத்தால்தான் அப்படி செய்தோம் என்று கூறிய ட்ரூடோ,தங்களுக்கும் அதேபோன்றதொரு நிலைமை ஏற்படலாம் என கனேடியர்கள் பலர் கவலைப்பட்டதாலேயே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிடவேண்டியதாயிற்று என்றும் கூறியுள்ளார்.