75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியா!
இந்தியா இன்று எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இதன்போது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தர போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
நாடு புதிய பாதையில் வெற்றிநடை போட இந்த வரலாற்றுத் தருணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் திரெளபதி முர்மு, நேற்றிரவு உரையாற்றினார். பொருளியல் மீட்சி, சீர்திருத்தக் கொள்கைகளைப் பாராட்டிய அவர், இந்தியாவின் ஆண்-பெண் சமத்துவமின்மை குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் Commonwealth விளையாட்டுகளில் போட்டியிட்ட இந்தியப் பெண்களையும் பிரதமர் மோடி தனது உரையில் சிறப்பித்துக் குறிப்பிட்டார்.