வேலைக்காக 25,000 டொலர்கள் செலவிட்ட இந்தியருக்கு ஆதரவாக வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு
இந்தியர் ஒருவர், கனடாவில் மெக்கானிக் வேலை பெறுவதற்காக 25,000 டொலர்கள் செலவிட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பொன்றை வாங்கியுள்ளது.
கனடாவில் மெக்கானிக் வேலை செய்வதற்காக ஹர்மிந்தர் சிங் என்னும் இந்தியர் தனக்கு வேலை கொடுத்தவருக்கு 25,000 டொலர்கள் கொடுத்த நிலையிலும், அவருக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை.
அது தொடர்பாக அவர் கனேடிய வேலைவாய்ப்பு தரநிலை தீர்ப்பாயத்தில் புகார் செய்துள்ளார். இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், சிங்குக்கு வேலை கொடுத்த A J Boyal Truck Repair Ltd என்னும் நிறுவனத்தின் ஆவணங்கள் முறையாக இல்லை என்பதை கண்டறித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, தீர்ப்பாயம், சிங்குக்கு, அவரது சம்பளம், ஓவர்டைம் பார்த்ததற்கான பணம், விடுப்பு ஊதியம், வேலைக்காக அவர் கொடுத்ததாகக் கூறும் பணத்தில் 15,000 டொலர்கள் என மொத்தம் 115,574.69 டொலர்கள் வழங்குமாறு A J Boyal Truck Repair Ltd என்னும் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அவர் A J Boyal Truck Repair Ltd நிறுவனத்துக்கு கொடுத்த 25,000 டொலர்களில், 10,000 டொலர்களை ரொக்கமாகக் கொடுத்ததால், அதற்கான ஆவணம் எதுவும் இல்லாததால், அதைத் திருப்பிக் கொடுக்க சொல்ல தீர்ப்பாயத்தால் இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.