உருமாறிய கொரோனா தினசரி பாதிப்பில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா; ஒரே நாளில் இவ்வளவா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,441 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ள நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் கொரோனா அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,839,127 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 130,147,630 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 104,874,241 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 96,732 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் 76,644 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 955 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 81,441 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன் கொரோனாவுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்துள்ளமை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.