பிரான்சை புரட்டிப்போட்ட சூறாவளி ; கடும் சேதம்!
பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான கார்கசோன் (Carcassonne) நகருக்கு அருகில் திடீரென உருவான அரிதான சூறாவளி (Tornado) காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பகுதியில் ஏற்பட்ட சூப்பர்செல் (Supercell) இடியுடன் கூடிய பருவநிலை மாற்றம் காரணமாக இந்தச் சூறாவளி உருவாகியுள்ளது.

சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் அந்த பகுதியில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த இயற்கை பேரிடரின் காரணமாக குறைந்தபட்சம் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந் நிலையில் சூறாவளி தாக்கிய பகுதிகளின் காட்சியமைப்புகளுடன் கூடிய காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.