கனடா-அமெரிக்க எல்லை வர்த்தகப் போர்: 50% வரி விதிப்பால் பதற்றம் அதிகரிப்பு
கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மோதல் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு எதிராக டாலருக்கு டாலர் என்ற முறையில் நாங்களும் பதிலடி வழங்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கார் வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் உருக்கு மீது வரும் ஜனவரி 1 முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒன்ராறியோ மாகாணத்தின் சாம்ரியா நகரின் மேயர் மைக் பிராட்லி, இந்த வர்த்தக மோதல் உள்ளூர் தொழில்துறையையும் வேலைவாய்ப்புகளையும் கடுமையாக பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட பல ஏற்றுமதிப் பொருட்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்றார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மர் மற்றும் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் ஆகியோர், இந்த வர்த்தகப் போர் இரு நாட்டு குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையை பாதிக்கும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 8 முதல் கனடாவின் பதிலடி வர்த்தக வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரச் சூழல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.