தனது வெற்றியை நிலைநாட்டியுள்ள இந்திய அணி!
தற்போது இடம்பெற்று வரும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, ரிங்கு சிங் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் பென் துவர்ஷுயிஸ் 40 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
தோல்வியை தழுவிய அவுஸ்திரேலிய அணி
இந்நிலையில், 175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியுடன் இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகளை இந்திய அணி வென்றதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது.