அமெரிக்க வரி கொள்கையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின வியாபாரங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய சுங்க கொள்கை காரணமாக, சில சிறிய பழங்குடியின கனடிய வியாபாரிகள் அமெரிக்காவுக்கு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தியுள்ளனர்.
முன்பு 800 அமெரிக்க டாலர் மதிப்புக்குக் குறைவான பொருட்கள் சுங்க சோதனை இல்லாமல் அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது புதிய விதிகளின் அடிப்படையில் 10 முதல் 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
பூர்வீக மக்களின் வர்த்தக உரிமைகள் மற்றும் உடன்படிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்” என கனேடிய பழங்குடியின வியாபார கவுன்சிலின் துணைத் தலைவர் மேத்யூ ஃபாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் சுங்க விலக்கு பெற தேவையான ஆவணங்கள் சிறிய வியாபாரிகளுக்கு சுமையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிபுணர்கள், இந்த கொள்கை பூர்வீக வியாபாரிகளின் பொருளாதார நிலையை சிக்கலாக்கும் என எச்சரித்துள்ளனர்.