இங்கிலாந்து அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் இந்திய அணி!
இந்தியாவின் லக்னோ மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்திய அணி 100 ஓட்டங்களால் இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் அதன் தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 49 ஓட்டங்களையும் கே . எல் . ராகுல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினா்.
இதன்படி, 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி சார்பில் லியாம் லிவிங்ஸ்டோன் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்ற அதேவேளை ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 04 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரிட் ல பும்ரா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்திய அணி மீண்டும் முதலிடத்தில் அங்கம் வகிக்கின்றமைக் குறிப்பிடத்தக்கதாகும்.