அமெரிக்காவில் பயங்கரம்...சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பம்; நடந்தது என்ன!
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தில், மிகப் பணக்கார இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகள் வீட்டுக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சம்பவத்தில் , ராகேஷ் கமல் (57), மனைவி டீனா (54), மகள் அரியனா (18) ஆகியோர், அவர்களது டோவர் பகுதியில் உள்ள மேன்ஷனில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
மிகப் பயங்கர சம்பவம்
போஸ்டனிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் டோவர் அமைந்துள்ளது. இது குடும்ப வன்முறை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு கணவரின் உடல் அருகே கைத்துப்பாக்கியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி , மிகப் பயங்கர சம்பவம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மூன்று பேரும் இறந்துவிட்டார்கள் என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உடல் கூறாய்வு முடிவுகள் வெளியானால்தான் கொலை - தற்கொலை சம்பவமா என்பது தெரிய வரும் என்று தெரிவிக்கிறார்கள்.
உயிரிழந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் , குடும்பத்தில் பிரச்னைகள் இருந்ததாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆன்லைனில் கல்வி வழங்கும் தனியார் மையத்தில் அவர்கள் பணியாற்றியதாகவும் அவர்கள் பெரிய பொறுப்புகளை வகித்துள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.