புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய கனேடிய பொலிசார்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாயமான இந்தியர் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி பகுதியை சேர்ந்தவர் 65 வயதான ராஜேஷ் வர்மா. இவரே கடந்த வியாழக்கிழமை முதல் மாயமாகியுள்ளார்.
கடைசியாக, சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் அவென்யூவின் 8800 தொகுதியில் மதியத்திற்கு மேல் சுமார் 3.30 மணியளவில் இவர் காணப்பட்டுள்ளார்.
தற்போது பர்னபி பொலிசார் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பகுதி மக்களில் எவரேனும் குறித்த நபரை சந்தித்தனரா என்பது தொடர்பில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த நபர் தொடர்பில் பொலிசார் மீண்டும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் செப்டம்பர் 15ம் திகதி மாலை 4 முதல் 6 மணி வரையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ராஜேஷ் வர்மா தொடர்பில் காண நேர்ந்திருந்தால் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரியுள்ளனர்.