இங்கிலாந்தில் பிரதமரின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நியமனம்
இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தி வகுப்பாளரும் ஊடகத் துறை நிர்வாகியுமான கவுதம் ரங்கராஜனை, பிரதமர் அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணத்துவ ஆலோசகராக நியமித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பில், முன்னாள் பிபிசி உத்தி வகுப்பாளரும் இசைக்கலைஞருமான கவுதம் ரங்கராஜன், லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் இந்த வாரம் தனது பணியைத் தொடங்குகிறார். அரசின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் உத்தி மற்றும் நிறுவன மாற்றங்களை செயல்படுத்துவதில் கவுதம் ரங்கராஜனுக்கு குறிப்பிடத்தக்க அனுபவம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.
புதிய நிர்வாக அணுகுமுறையை உருவாக்கும் முயற்சியில் ரங்கராஜனின் உத்தி மற்றும் நிறுவன மாற்ற அனுபவம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிபிசி நிர்வாகியாக பணியாற்றியுள்ள கவுதம் ரங்கராஜன், ஊடகம் மற்றும் நிறுவன உத்தி சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.