கனடிய மருத்துவமனையில் இந்திய வம்சாவளி நபருக்கு ஏற்பட்ட பெரும் சோகம்
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருந்து உயிரிழந்துள்ளார்.
44 வயதான இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு கனடாவின் எட்மாண்டன் பகுதியில் வைத்தியசாலை ஒன்றில் காத்திருந்து மரணித்துள்ளார்.
இருதய வலி தொடர்பாக குறித்த நபர் அவதியுற்றிருந்தார் எனவும் கடுமையான வலி ஏற்பட்டதாக அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

”என்னால் இந்த வலியை தாங்கள் முடியவில்லை தந்தையே” என குறித்த நபர் தனது தந்தையிடம் உருக்கமாக கூறியதாக அவரது தந்தை தெரிவிக்கின்றார்.
எவ்வாறு எனினும் குறித்த மருத்துவமனையில் அந்த நபர் 8 மணித்தியாலங்கள் வரையில் சிகிச்சை எதுவும் அளிக்கப்படாமல் காத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மருத்துவ மனையில் ஈ.சீ.ஜீ சோதனை ஒன்று எடுக்கப்பட்டு அவருக்கு எவ்வித அவசர சிகிச்சையும் அளிக்க தேவை இல்லை என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற 44 வயதான நபரே எவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் ஓர் கணக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது. நேரத்திற்கு நேரம் குறித்த நபரின் இரத்த அழுத்தம் மட்டுமே சோதனை இடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
14 ,10 மற்றும் மூன்று வயது பிள்ளைகள் தந்தையான ஸ்ரீகுமாரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மருத்துவமனை கருத்து எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.