கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியினர் ஒருவர்
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அந்த இந்திய வம்சாவளி நாடாளும்னற உறுப்பினரின் பெயர், சந்திரா ஆர்யா.
ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர், தார்வாடு என்னுமிடத்திலுள்ள கர்நாடகா பல்கலையில் முதுகலை வணிக மேலாண்மை பயின்றவர்.
அதற்குப் பிறகு கனடா வந்த ஆர்யா, 2015ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
I am running for the position of Prime Minister of Canada.
— Chandra Arya (@AryaCanada) January 12, 2025
Our nation faces structural challenges that require tough solutions.
We must make bold political decisions to secure prosperity for our children and grandchildren.
I have outlined everything in the statement provided… pic.twitter.com/bIdK0RFX18
சமூக ஊடகமான எக்ஸில் ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தான் கனடாவின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.