நியூயோர்க் மேயராக பதவியேற்ற மம்தானி ; அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம்
நியூயோர்க் மேயராக இந்திய வம்சாவளியினரான மம்தானி இன்று (01) பதவியேற்றுள்ளார்.
நியூயோர்க் மேயராக பதவியேற்கும் முதல் இஸ்லாமியர் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம்
புத்தாண்டு நாளான இன்று (01) நியூயோர்க்கில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் இவர் மேயராகப் பதவியேற்றார்.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து இவர் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்ற பின் மம்தானி தெரிவித்ததாவது , நியூயோர்க் நகரின் மேயராகப் பதவியேற்பது வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.
ஹமாஸ் ஆதரவாளராகவும், கம்யூனிச சித்தாந்தங்களை பின்பற்றுபவராகவும் அறியப்படும் மம்தானிக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.