அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவழி மாணவி; விசாரணைக்கு வலியுறுத்து
அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என இந்திய துணை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா பொலிஸ் வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர், கேலி செய்து சிரிக்கும் வீடியோ வெளியானது.
இந்நிலையில் ஜாஹ்னவி கந்துலாவின் மரணத்தைக் கையாளும் ஊடகங்கள் உட்பட சமீபத்திய செய்திகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக சான்பிரான்ஸிஸ்கோ இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.