பிரித்தானிய ராணியை கொல்ல முயற்சித்த இந்திய வம்சாவளி இளைஞன்! அதிர்ச்சி வாக்குமூலம்
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல முயற்சித்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரித்தானியாவின் நீண்டகால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமை வகித்தவர் இரண்டாம் எலிசபெத்.
கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் திகதி தனது 94-வது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ராணியை கொல்வதற்காக அரசு இல்லத்திற்குள் ஒருவர் புகுந்துள்ளார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைல் என தெரிய வந்தது.
சம்பவம் நடந்தபோது அவருக்கு வயது 19. விசாரணையில், ராணியை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தேன் என அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
இதற்காக அவர், தன்னுடன் வில் அம்பு வடிவிலான ஆயுதம் ஒன்றை ஏந்தி சென்றுள்ளார். அவர் எதற்காக ராணியை கொல்ல சென்றார் என்று விசாரிக்கப்பட்டது. அவருக்கு மனநல சிசிக்சையும் அளிப்பதற்காக பிராட்மூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபடி காணொளி இணைப்பு வழியே லண்டன் நகரின் ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், நடந்த குற்ற சம்பவங்களை சிங் ஒப்பு கொண்டுள்ளார்.
இந்த தாக்குதல் முயற்சி சம்பவத்திற்கு முன்பு, ஜஸ்வந்த் சிங் பலருக்கும் காணொளி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இந்தியாவில் 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து இந்தியர்களுக்காகவும், பழி வாங்குவதற்காக சிங் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, 1842-ம் ஆண்டு தேச துரோக சட்டத்தின் கீழ் சிங் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.