கனேடிய நகரமொன்றில் இந்தியப் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை: கணவர் கைது
கனேடிய நகரமொன்றில் இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக பலியானார்.
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து கனடா வந்தவர் பல்வீர் சிங் (57). பல்வீந்தரின் மனைவி குல்வந்த் கௌர் (46), தங்கள் மகனுக்கொரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தன் பங்களிப்பைச் செய்வதற்காக தன் மகனுடன் 2019ஆம் ஆண்டு கனடா வந்துள்ளார். அவனுக்கு இப்போது 8 வயதாகிறது.
46 yrs old Kulwant Kaur is the latest victim of domestic violence homicide @NewWestminister . Her husband Balvir Singh facing 2nd degree murder charges and their 8yrs old son is under MDFD custody. How community come forward to help, tonight @OMNIpunjabi pic.twitter.com/sKbhY2ioru
— Prabhjot Kahlon (@PrabhjotKahlon) October 16, 2023
கனடா வந்த பிறகு, கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, அக்டோபர் 13ஆம் திகதி, பல்வீந்தர் தன் மனைவி குல்வந்தைக் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
அவசர உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தும், குல்வந்தைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
கணவர் கைது
மனைவியை கொடூரமாகக் குத்திக் கொன்றதற்காக பல்வீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தம்பதியரின் மகன் அரசின் பொறுப்பில் உள்ளான். மகளது உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்காகவும், குழந்தைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், குல்வந்தின் பெற்றோர் கனடா புறப்பட்டுள்ளார்கள்.