லண்டனில் இந்திய பெண் மேஹக் சர்மா கொலை
லண்டனில் உள்ள குரோய்டனில் இந்திய பெண் மேஹக் சர்மா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரோய்டனில் வசித்து வந்த மேஹக் சர்மா உடலில் கத்தியால் குத்தப்பட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் கொலைச்சம்பவம் தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷைலி ஷர்மர் (வயது23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் குரோய்டனின் ஆல்ட்ரீவே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட மேஹக் சர்மா சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், அவருக்கு தெரிந்தவரா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் மேஹக் சர்மா மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவுக் அவரது பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.