அமெரிக்காவில் இந்திய பெண்ணின் மோசமான செயல்; தூதரகம் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள 'டார்கெட்' எனும் சூப்பர் மார்க்கெட்டில், இந்திய பெண் ஒருவர், சுமார் 7 மணி நேரம் பொருட்களை தேடி, தேடி எடுத்திருக்கிறார்.
சுமார் 1000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை திருடிய இந்திய பெண் , அந்த பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆக முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.
நாடு கடத்தப்படுவார்கள்
இதனையடுத்து, அமெரிக்க தூதரகம், விசா குறித்த எச்சரிக்கையை அளித்திருக்கிறது. கொள்ளை போன்ற செயல்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசாவிற்கு உங்களை தகுதியற்றதாக செய்யக்கூடும் அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதைத் தடுக்கலாம் என்று அறிவுரையை தூரதகம் அளித்துள்ளது.
அதோடு வெளிநாட்டினர் அமெரிக்காவின் சட்டத்தையும், ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றன.
ஆனால் இந்தியர்களை பொருத்தவரை, இந்த தண்டனைகள் வழங்கப்படுவதற்கு பதில் அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி ரத்து செய்யப்பட்டால் அமெரிக்காவுக்குள் இருப்பது சட்டவிரோதமாக கருதப்படும். எனவே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.