அமெரிக்க கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்கள்... கிடைக்கும் முன்னே இறந்து விடுவார்கள்
அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களில் சுமார் 4 லட்சம் பேர், கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே வயதாகி இறந்துவிடக் கூடும் என அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
63 சதவீதம் பேர் இந்தியர்கள்
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒதுக்கப்பட்ட கிரீன் கார்டுகளை விட அதற்கு தகுதியானவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் காத்திருக்கும் காலம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேவேளை , அமெரிக்காவில் இதுவரை வேலை பார்த்துக்கொண்டே கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ள 18 லட்சம் பேரில் 63 சதவீதம் பேர் இந்தியர்கள் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , புதிதாக கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் 134 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.