துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பில் இம்ரான் கான் வெளியிட்ட தகவல்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இம்ரான் கான் மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்ற விஷயம் தனக்கு ஒரு நாள் முன்பே தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும் தன் மீது 4 தோட்டாக்கள் பாய்ந்துள்ளது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.