போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு (வயது 88) திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவரது உடநிலை தற்போது சீராக உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட போப் பிரான்சிஸ் , வாடிகனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வாடிகன் கூறியுள்ளதாவது, போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆனால், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாக தெரிவித்துள்ளது.