பிராம்ப்டனில் தொழிற்சாலை விபத்து
ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி பிராம்ப்டனில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரிட்ட ஒரு தொழிற்சாலை விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஃபின்ச் (Finch) மற்றும் ஸ்டீல்ஸ் (Steeles) அவென்யூக்களுக்கு அருகில் உள்ள பார்க்ஷோர் டிரைவ் (Parkshore Drive) பகுதியில், இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பீல் (Peel) பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். விபத்துக்குள்ளான தொழிலாளியின் தற்போதைய உடல்நிலை குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.