கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்வோர், மகிழ்ச்சி அடையக் கூடிய வகையிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் வீட்டு சந்தை மிகுந்த செலவு மிக்க சந்தைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு அதிகளவானவர்கள் அணுகும் அடகு கடன் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி அடகு கடனுக்கான காப்புறுதி கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளது. இது வீடு கொள்வனவு செய்வோருக்கு பெரும் நன்மை அளிக்கும் என வீட்டு மனை துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காப்புறுதி கட்டண குறைப்பானது வீடு கொள்வனவு செய்பவர்களின் கொள்வனவு இயலுமையை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் வீடு ஒன்றை அடகு கடன் அடிப்படையில் கொள்வனவு செய்பவர்கள் பெரும் சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது.
இந்தக் கட்டண குறைப்பானது அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தூண்டப்பட கூடும் என தெரிவிக்கப்படுகிறது.