அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் சுவாரஸ்ய தகவல்!

India France Russia China Pakistan United States North Korea Britain Israel Nuclear weapons
By Independent Writer Mar 01, 2022 12:21 PM GMT
Report

உலகில் தற்போது ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.

அந்த நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா.

அணு ஆயுதங்களைப் பற்றி எந்த நாடும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அணு ஆயுத நாடுகளின் ராணுவத்திடம் 9,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்வீடனை தளமாகக் கொண்ட 'ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' (SIPRI) என்ற சிந்தனைக் குழு கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஒன்பது நாடுகளிடம் சுமார் 13,400 அணு ஆயுதங்கள் இருந்தன என்றும் அவற்றில் 3,720 ஆயுதங்கள் படைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கிறது.

இந்த ஆயுதங்களில் சுமார் 1,800 அதிக உஷார் நிலையில் உள்ளன. அதாவது, அவற்றை குறுகிய நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று SIPRI கூறுகிறது. இதன்படி ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன.

2020ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் இருக்கும் என்று அது மேலும் தெரிவிக்கிறது. இதேபோல் அணு ஆயுதங்களைப் பொருத்தவரை இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை விடக் கூடுதலாக வைத்திருக்கின்றன என்று SIPRI அறிக்கை தெரிவிக்கிறது.

2021ல் இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும், சீனாவிடம் 320 அணு ஆயுதங்களும் இருந்தன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 1970ஆம் ஆண்டில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அதாவது NPT எனப்படும் ஒரு ஒப்பந்தம், 190 நாடுகளுக்கு இடையே அமலுக்கு வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவும் இதில் அடங்கும். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை. 2003ல் வடகொரியா அதிலிருந்து விலகியது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டான 1967க்கு முன்பாக அணு ஆயுதங்களை சோதனை செய்த ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தின் கீழ், அணு ஆயுத நாடுகளாக கருதப்பட்டன.

அந்த நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா. இந்த நாடுகள் தங்கள் ஆயுத சேகரிப்பை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது அதாவது, அவற்றைக் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

கூடவே இந்த நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்தன.

ஆனால் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் ஆயுதங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அதே போல இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.  

Gallery
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US