உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஈரான் விதித்த தண்டனை
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பஹ்மான் சூபியாஸ்ல் என்ற நபரை தூக்கிலிட்டதாக ஈரான், அறிவித்துள்ளது.
நீண்டகாலத்திற்கு பிறகு, ஈரானில் நடைபெறும் மிகப்பெரிய தூக்குத் தண்டனை அலைக்குள் இந்த நபரும் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த தண்டனை தொடர்பில் ஈரானின் நீதித்துறை அதிகாரப்பூர்வ ஊடகம் மிசான் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் மோசாட் என்ற இஸ்ரேலிய உளவுப் படை அதிகாரிகளுடன் சந்தித்து தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், தொலைத்தொடர்பு தொடர்பான நுணுக்கமான திட்டங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் இறக்குமதி பாதைகள் குறித்து தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தூக்குத் தண்டனை, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுக்கு மீண்டும் அணு ஆயுதத்துடன் தொடர்புடைய தடைகள் விதித்ததைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.