ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை நாங்கள் அடிபணிய மாட்டோம் ; வெளியுறவு அமைச்சா்
ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி நேற்று தெரிவித்தாா்.
இந்நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பேசுகையில் அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை. ஆனால், அவா்கள் நம்முடைய அணுகுண்டு குறித்து அச்சம்கொள்கின்றனா்.

நம்முடைய அணுகுண்டு என்பது பெரும் அதிகார சக்திகளுக்கு அடிப்பணிய மட்டோம் என்பதே. பிற நாடுகளின் ஆதிக்கம், அழுத்தங்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் ஈரானுக்கு உள்ளது என்றாா்.
இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிராந்தியத்தில் நட்பு நாடுகளின் முயற்சியால் நடைபெற்ற ஈரான்-அமெரிக்க பேச்சுவாா்த்தை ஓா் அடுத்தகட்ட நடவடிக்கை.
மரியாதை அளிப்போருக்கு ஈரான் எப்போதும் மரியாதை அளித்துள்ளது. ஆனால், ராணுவ பலத்தைப் பயன்படுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.