ஈரான் மீது தாக்குதல் ; கொரோனாவுக்கு பின் வளைகுடா பொருளாதாரத்தில் பெரும் சரிவு
அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளின் முக்கிய வர்த்தக மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போர் உலகின் வர்த்தகப் கலாச்சாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. துபாய் போன்ற நகரங்கள் கடந்த பல தசாப்தங்களாகத் தங்களை ஒரு பாதுகாப்பான சுற்றுலா மற்றும் முதலீட்டுத் தலமாக நிலைநிறுத்தியிருந்தன.

துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில், முதலீட்டாளர்கள் பின்வாங்கும் நிலை
ஆனால், தற்போதைய தாக்குதல்கள் அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளன. துபாயின் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள சொகுசு விருந்தகத்திலும் பேர்மாண்ட் தி பாம் தீப்பற்றி எரிந்ததோடு, உலகப் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் விருந்தகத்திலும் ஏவுகணைத் துண்டுகளால் சேதமடைந்துள்ளது.
அதேவேளை கடந்த ஆண்டு மட்டும் 2 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில், தற்போது முதலீட்டாளர்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
துபாய், அபுதாபி மற்றும் தோஹா ஆகிய சர்வதேச வானூர்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் முக்கிய மையமாக விளங்கும் வளைகுடாவின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.
அதேவேளை இது கொரோனா பெருந்தொற்றுக்குக் பிறகு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார முடக்கமாகப் பார்க்கப்படுகிறது.